Thursday, June 24, 2010

"அல்கைதாவும் அமெரிக்காவும் நண்பர்கள்!" - ஒரு பயங்கரவாதியின் சாட்சியம்

"அல்கைதாவுடன் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை." - பிடிபட்ட பயங்கரவாதியின் வாக்குமூலம். மேலும் ஈரான் போன்ற நாடுகளில் இயங்கி வரும், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க அரசு ஆயுதங்களும், நிதி உதவியும் வழங்கி வந்துள்ளது. பெப்ரவரி மாதம் ஈரானில் பல பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான "ஜன்டுல்லா" (அல்லாவின் சேனை) என்ற இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் துபாயில் இருந்து கிரிகிஸ்தான் செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது பிடிபட்டார். கிரிகிஸ்தான் மனாஸ் அமெரிக்க இராணுவ முகாமில் ஒரு முக்கிய புள்ளியை சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்த பொழுது, விமானம் ஈரானில் பலவந்தமாக தரையிறக்கப்பட்டது. ஜன்டுல்லா தலைவர் ரிகி கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் தூக்கில் இடப்பட்டார்.
இங்கேயுள்ள வீடியோவில் பிடிபட்ட ஜன்டுல்லா தலைவர் ரிகியின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.


இது குறித்து கலையகத்தில் ஏற்கனவே வந்த செய்தி:
ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்

6 comments:

Anonymous said...

வணக்கம் கலையரசன்.
அல்காய்தா என்ற அமைப்பு இல்லை என்பதாகவே பலரும் கூறுகிறார்கள். ஆனால் உங்களது இந்த பதிவின் தலைப்பு அல்காய்தா என்ற அமைப்பு இருப்பதாக உணர்த்துகிறதே?

Kalaiyarasan said...

அல்கைதா என்பது ஆப்கானிஸ்தானில் தங்கி விட்ட, சர்வதேச இஸ்லாமிய போராளிகளுக்கு சூட்டப்பட்ட பொதுப் பெயர். அதிலிருந்து ஆரம்பித்து அமெரிக்க ஊடகங்கள் எதற்கெடுத்தாலும் அல்கைதா என்று இழுக்கத் தொடங்கி விட்டன. உண்மையில் அல்கைதா என்ற பெயரில் உலகில் எந்த அமைப்பும் இயங்குவதில்லை.

FRIENDS said...

i reading ur articles continuely.. its nice.. carry on..

Anonymous said...

Read this:
http://www.forwards4all.com/jokes/antngrasshopper.html

It's not relavent to post here. However, it has a lesson.

kumar said...

வணக்கம்! நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.இதுவரை பின்னூட்டம் கூட இட்டதில்லை.வெட்கக்கேடான விஷயம்
என்னவென்றால் அது எப்படி என்பது கூட தெரியாமல் இருந்தது.ஒவ்வொரு கட்டுரைக்கும் பின் இருக்கும் உங்கள் உழைப்பு உண்மையிலேயே
வியப்பூட்டுகிறது.தொடரட்டும் உங்கள் சீரிய பணி.நன்றி.

kumar said...

இந்த அனானி,லின்க்கில் கொடுத்திருக்கும் கதை நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் என்ன சொல்ல வருகிறார் இவர்?
உழைக்கும் கூட்டமெல்லாம் அமெரிக்கா போய் செட்டிலாகி விட்டது,சோம்பேறிகள் கூட்டம் மட்டும் இந்தியாவில் தங்கிவிட்டது என்றா?
அங்கே போய் செட்டிலான கூட்டம் எந்த கூட்டம் என்பதும்,அந்த கூட்டத்தின் உழைப்பு எப்படிபட்டது என்பதும் ஊருக்கே தெரியும்.
கல்வி கொடுத்த தேசத்திற்கு கைம்மாறு செய்யாமல்,நையாண்டி வேறா? உதைத்து அனுப்புவார்கள் ஒருநாள்.