Saturday, October 17, 2009

சிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

கந்துவட்டிக்கு கடனை வாங்கி வெளிநாடு சென்று, தொழில் இன்றி ஏமாந்து நாடு திரும்பியவர்களின் கண்ணீர்க்கதை இது. அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம், முகவர்களிடம் ஏமாந்த பங்களாதேஷ் தொழிலாளர்களின் துயரத்தை சொல்கின்றது. இந்த அப்பாவிகளின் பணத்தை விழுங்கிய முதலைகள் முகவர்களா? அல்லது சிங்கப்பூரின் போலி தொழில் வழங்குனர்களா? சர்வதேச கிரிமினல் கும்பலின் மோசடியை ஆராயும் ஆவணப்படம்.

3 comments:

V.THAMIZHMARAIYAN said...

இன்றுதான் ( 12.12.2012 ) வெளிநாட்டுத் தொழிலாளரை மோசம் செய்யும் தரகர்களின் அட்டூழியம், தொழிலாளிலாரின் சொல்லொண்ணா துயரத்தைக் கண்டுநான் கலங்கினேன், உங்களின் முயற்ச்சி பெற்றிபெற வேண்டும். வாழ்த்துகள். இவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் மலரட்டும். நன்று. நன்றி.

V.THAMIZHMARAIYAN said...

வெளிநாட்டுத் தொழிலாளர் வாழ்வு , உங்களால் மலரட்டும். மானுடம் தழைத்திடனும் மாண்புடனே ! நன்றி.

nerkuppai thumbi said...

இரண்டு விஷயங்களில் தெளிவு வேண்டும்:
ஒன்று: வங்கதேச இளைஞர்களை ஏமாற்றியது வங்கஏஜெண்டுகள் தான் என்று நினைக்கிறேன். சிங்கப்பூர் என்ன செய்யும்?

இரண்டு: வங்க நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தால் சிங்கப்பூர் செல்லும் ஆசையில் பணம் கொடுத்து ஏமாறுவார்கள்? சேரனின் வெற்றிக் கொடி கட்டு படம் பார்த்த பலரும் வெளி நாட்டுக்கு பணம் கொடுத்து வேலைக்கு போக விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை. இந்த படத்தை வங்கத்தில் ஓட்டலாம்.