Friday, September 18, 2009

நீங்களும் பயங்கரவாதியாகலாம்! - விவரணப்படம்

மேலை நாட்டு அரசுகள் தகவல் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி, தமதுபிரஜைகளை கண்காணித்து வருகின்றன. ஒவ்வொரு பிரஜையும்பயங்கரவாதியாக சந்தேகிக்கப்படுகின்றனர். அவர்களது தொலைபேசிஅழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மின்னஞ்சல்கள் உடைத்துப்படிக்கப்படுகின்றன. ஒருவர் இணையத்தில் பார்வையிடும் தளங்கள் கூட அரசபுலனாய்வுத்துறையின் கழுகுக் கண்களுக்கு தப்பமுடியாது. அவர்கள்நினைத்தால் உங்கள் கணனியில் பதிந்துள்ள விபரக் கோவைகளையும் கவர்ந்துசெல்லலாம்.
"நீங்களும் ஒரு பயங்கரவாதி தான்" என்ற இந்த விவரணப்படம் ஜெர்மன் மக்களுக்கு அறிவுபுகட்டும் முகமாக சில சமூக ஆர்வலர்களால்தயாரிக்கப்பட்டது. ஆங்கில உப-தலைப்புகளுடன் ஜெர்மன் மொழி பேசும்வீடியோ.

YOU ARE A TERRORIST (English sub-title)

5 comments:

மு. மயூரன் said...

தற்காலத்தின் உச்சபட்ச தொழிநுட்பம் அதிகாரங்களின் கையிலேயே இருக்கும்.

ஏனெனில் அந்தளவு தொழிநுட்பத்துக்கான உழைப்பினையும் மூலதனத்தையும் அவர்களாலேயே வாங்கிவைத்துக்கொள்ள முடியும்.

தொழிநுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி சாதாரண மனிதருக்கும் தொழிநுட்பத்துக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துக்கொண்டே போகிறது.

தொழிநுட்ப உற்பத்திகளை நுகர்பவருக்கு அந்த உற்பத்தியின் பின்னாலுள்ள பாரிய நுட்பங்கள் பற்றி பெரிதாக எதுவுமே தெரிந்திருக்காது.

இது "கண்காணிப்பிற்கு" மிகவும் பயனுள்ளதாய் போய்விடுகிறது.

தொழிநுட்பம் மேலும் மேலும் அதிகாரங்களின் கைகளில் குவியும் போது கண்காணிப்பும் அதிகாரமும் மேலும் மேலும் இறுக்கமடையும்.

சாதாரண மக்கள் தொழிநுட்பத்தின் நுகர்வாளர்களாக மாற்றப்பட்டு, நுகர்வின் அடிமைத்தனத்தினூடாக அதிகாரத்தின் அடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

Matrix திரைப்படம் இந்த அரசியலையே பேசுகிறது. (அதன் மூன்று பகுதிகளையும் இதுவரை பார்த்திராதவர்கள் பார்த்துவிடுங்கள்)

இந்த விசயம் தொடர்பான எனது இரு பதிவுகள்:

படிக்கும் உரிமை


Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான பதிவு

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !!!!

இப்படிக்கு
ஒரு பயங்கரவாதி

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

பிரித்தானியா உலகிலே தன் மக்களை அதிகமாக கண்காணிக்கும் நாடாகும். (அது குறித்த சுட்டி கிடைக்கவில்லை. ஆயினும்..) HOW WE CAN BE WATCHED என்ற பெட்டியைக் காணவும்.
---------------

//There are up to 4.2m CCTV cameras in Britain - about one for every 14 people.//

http://news.bbc.co.uk/2/hi/uk_news/6108496.stm

சிங்கக்குட்டி said...

//நீங்களும் பயங்கரவாதியாகலாம்! - விவரணப்படம்//

இப்படியா கதி கலக்குறது?

அணில் said...

அதே மேலை நாட்டு நிறுவனங்கள் இங்கு கால்பதிக்கும் போது இங்கும் ஒவ்வொரு பணியாளனும் தீவிரவாதி போல் நடத்தப் படுகிறான்.
நானறிந்தவரை சென்னையிலேயே இந்த வேலைகள் நடக்கின்றன.
http://tamilcpu.blogspot.com/2015/02/blog-post.html